ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Apr 25 2017 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி, தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பெரிய திருத்தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கும்பகோணம் அருள்மிகு நாகேஸ்வரர் சுவாமி ஆலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 தேதிகளில் மட்டும், விடியற்காலை சூரிய உதயத்தின்போது, சூரிய ஒளிக்கதிர்கள், மூலவர் மீது படும். இந்நிலையில், இன்று விடியற்காலை சூரிய கதிர்கள் நாகேஸ்வரர் மீது விழுந்த சூரிய பூஜை நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கம்பட்டியில், 150-க்கும் மேற்பட்டோர் மழை வேண்டி, பிள்ளையார், நரசிம்மர், புலி, மயில், சேவல் என வேடம் அணிந்து வேட்டவராயன் கோயிலிலிருந்து 7 கிலோமீட்டர் தூரம் பாதையாத்திரையாகச் சென்றனர். செண்டை மேளதாளங்களுடன் புறப்பட்ட இந்த ஊர்வலம், பின்னர் சங்கம்பட்டி காளியம்மன் கோயிலை வந்தடைந்து அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00