இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் இன்று நிகழ்கிறது சந்திர கிரகணம் - டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் - திருப்பதி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடை அடைப்பு

Aug 7 2017 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மாலை முதல் 10 மணி நேரம் நடை அடைக்கப்பட உள்ளது.

அரிய, வான் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. அப்போது, கோயில் நடைகள் அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இன்று மாலை 4 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. தங்கும் அறைகளிலும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அன்னப் பிரசாதக் கூடமும் மூடப்பட்டு இருக்கும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அதிகாலை 2 மணிக்குப் பிறகு கோயில் நடை திறக்கப்பட்டு தூய்மை செய்யும் பணியும், பின்னர், சுப்ரபாத சேவையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுமார் 15 மணி நேரத்துக்குப் பின்னரே, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்திலும், சந்திர கிரகணத்தையொட்டி கோயில்களில் நடை சாத்தப்படுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00