இந்துக்களின் புனித மாதம் எனப்படும் Saawan மாதத்தின் கடைசி திங்கள் அனுசரிப்பு : வடமாநிலங்களில் சிவன் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது

Aug 7 2017 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்துக்களின் புனித மாதம் எனப்படும் Saawan மாதத்தின் கடைசி திங்கள் இன்று அனுசரிக்கப்படுவதால் வடமாநிலங்களில் உள்ள பிரபல சிவன் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

சிவபெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படும் Saawan மாதத்தில், சிவ பக்தர்கள் விரதம் இருந்து கங்கையில் இருந்து புனிதநீர் எடுத்து, சிவன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று அபிஷேகம் செய்வது வழக்கம். அந்தவகையில், கடந்த ஜூலை 10ம் தேதி Saawan மாதம் பிறந்ததையடுத்து வடமாநிலங்களில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. Saawan மாதத்தின் கடைசி திங்கட்கிழமையான இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் Allahabad கோவிலிலும் சிவ பக்தர்கள் கங்கையில் இருந்து புனிதநீர் எடுத்து, சிவனுக்கு அபிஷேகம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டில்லியில் உள்ள கெளரி சங்கர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதேபோன்று மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாபுல்நாத் கோவிலிலும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மகா காலேஷ்வர் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00