பகவான் கிருஷ்ணர் அவதரித்த மதுரா நகரம் ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தை ஒட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது : பிருந்தாவன் கோயிலில் அலங்காரத்திற்காக சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என நிர்வாகத்தினர் உறுதி

Aug 12 2017 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

பகவான் கிருஷ்ணர் அவதரித்த மதுரா நகரம், ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தை ஒட்டி விழாக்‍கோலம் பூண்டுள்ள நிலையில், அங்குள்ள பிருந்தாவன் கோயிலில் அலங்காரத்திற்காக சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ண பகவான் ஆலயம் உள்ளது. கிருஷ்ணர் அவதரித்த இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜென்மாஷ்டமி தினம் வெகு சிறப்பாக, பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். பிருந்தாவன் கோயிலில் பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து, பல வண்ண நிறத்திலான மின் விளக்குகள் அமைத்து சிறப்பான அலங்காரங்கள் செய்யப்படும். இந்த ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, பிருந்தாவன் ஆலயம் மின்னொளியில் ஜொலித்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு கொண்டாட்டத்தில், சீன விளக்குகள் மற்றும் சீன தயாரிப்பு அலங்கார பொருள்கள் நிச்சயம் இடம்பெறாது என பிருந்தாவன் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்‍தர்களும் சீன தயாரிப்புகளை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, இந்திய எல்லையில் தனது படைகளை நிறுத்தியுள்ள சீனாவை கண்டிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிருந்தாவன் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00