விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரீன் கணபதி என்ற பெயரில் சிலைகள் தயாரிப்பு

Aug 18 2017 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிரீன் கணபதி என்ற பெயரில் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்க்கும் வகையிலும், பசுமையை வலியுறுத்தும் வகையிலும், கோவையில் கிரீன் கணபதி என்ற பெயரில் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. வடவள்ளியை சேர்ந்த ஐ.டி துறையில் பணியாற்றும் சுவராஜித் என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் இணைந்து, இச்சிலைகளை தயாரித்து வருகிறார். சிலையின் நடுவில் பல்வேறு வகை விதைகளும் வைக்கப்படுகின்றன. இதனால் சிலைகள் நீரில் எளிதாக கரைவதுடன், விதைகள் முளைத்து மீன்களுக்கு உணவு கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00