தசரா பண்டிகையையொட்டி கர்நாடகத்தில் மைசூர் அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன

Sep 30 2017 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தசரா பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் அரண்மனை, வண்ண விளக்‍குகளால் அலங்கரிக்‍கப்பட்டுள்ளன.

தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் பெற்று மகிஷனை சம்ஹாரம் செய்த இடம் மகிஷாபுரம். பின்னர், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மாறியது. மகிஷ வதம் நடைபெற்ற கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில், தசரா விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைக்‍ காண உலகெங்கும் இருந்து லட்சக்‍கணக்‍கான மக்கள் கூடுவர். இதனையொட்டி நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களும் சிறப்பு பூஜைகளும், கொண்டாட்டங்களும் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி மைசூர் அரண்மனை, டவுன் ஹால், கலாமந்திர், கானபாரதி, ஜகன்மோகன் அரண்மனை, சிக்க கடியாரா, குப்பண்ணா பார்க் மற்றும் சாமுண்டி மலைகள், பெங்களூரு பகுதிகளிலும் தசரா போட்டிகளும், கலாசார நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. தசரா விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி, மைசூர் அரண்மனை லட்சக்கணக்கான வண்ண மின் விளக்‍குகளால் அலங்கரிக்‍கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00