திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

Oct 1 2017 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்‍கோயிலில் திருக்‍கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பூர்வாங்க பணிகளுக்‍கான பந்தக்‍கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்‍கோயிலில் திருக்‍கார்த்திகை தீபத்திருவிழா வரும் நவம்பர் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத் தொடங்குகிறது. டிசம்பர் 2ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா நடைபெறவுள்ள நிலையில், பூர்வாங்க பணிகளுக்‍கான பந்தக்‍கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, திருக்‍கோயிலில் இருந்து பந்தக்‍கால் கொண்டு வரப்பட்டு, விநாயகர், முருகர், மகா ரதம், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட திருத்தேர்களுக்‍கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க பந்தக்‍கால் நடப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி விமானங்களும், திருத்தேர்களும் பழுது பார்க்‍கப்பட்டு வண்ணங்கள் பூசும் பணி இன்று தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00