சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த வழக்‍கு - 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்‍கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

Oct 13 2017 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்‍குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்‍கை, உச்சநீதிமன்றம் இன்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்‍கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

கேரளாவைச் சேர்ந்த இளம் வழக்‍கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்‍கக்‍கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்‍குத் தொடர்ந்திருந்தது. சபரிமலையில் தற்போது 10 வயதுக்‍கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்‍கு மேற்பட்ட மூதாட்டிகளும் மட்டுமே அனுமதிக்‍கப்படுவதாகவும், இதனை மாற்றி அனைத்துப் பெண்களையும் சபரிமலைக்‍குச் செல்ல அனுமதிக்‍க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. மேலும், இந்த நடைமுறைக்‍கும், இந்து மதத்திற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்‍கை நீதிபதி திரு.தீபக்‍ மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது. இன்றைய தினம் இந்த வழக்‍கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்‍கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று மீண்டும் இந்த வழக்‍கு விசாரணைக்‍கு வந்தது. அப்போது இந்த வழக்‍கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்‍கு மாற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அனைத்து பெண்களையும் சபரிமலைக்‍குச் செல்ல அனுமதிப்பது, கேரள இந்துமத சம்பிரதாயங்களுக்‍கு விரோதமானதா? இந்த நடைமுறை ஆண், பெண் சமத்துவத்திற்கு எதிரானதா? அனைத்து பெண்களையும் அனுமதிப்பது இந்து மத பக்‍தர்களின் நம்பிக்‍கையை பாதிக்‍கிறதா? என்பன உள்ளிட்ட 6 கேள்விகளை கருத்தில்கொண்டு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்‍க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00