200 ஆண்டுகளுக்‍குப் பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலிருந்து திருவானைக்‍காவல் அகிலாண்டேஸ்வரிக்‍கு சீர்வரிசை வழங்கும் வைபவம் - பெருந்திரளான பக்‍தர்கள் பங்கேற்று வழிபாடு

Dec 16 2017 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

200 ஆண்டுகளுக்‍குப் பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலிருந்து திருவானைக்‍காவலில் கோவில் கொண்டுள்ள அகிலாண்டேஸ்வரிக்‍கு சீர்வரிசை வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதில், பெருந்திரளான பக்‍தர்கள் பங்கேற்று வழிபட்டனர். Roll Visuals சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைக்‍கும் வகையில் முற்காலத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலையும், திருவானைக்‍காவலில் உள்ள சிவாலயமான ஜம்புகேஸ்வரர் ஆலயத்தையும் ஒன்றிணைக்‍கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால், காலப்போக்‍கில் இந்த நடைமுறை ஏதோ காரணத்தினால் நின்று போனது. மார்கழி மாதப் பிறப்பையொட்டி இன்று சைவ வைணவ இணைப்பைக்‍ குறிக்‍கும் வகையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலிருந்து திருவானைக்‍காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மனுக்‍கு சீர்வரிசை வழங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ஆலயத்திலிருந்து இணை ஆணையர் ஜெயராமன், பட்டாச்சாரியார்கள், பட்டுப்புடவைகள், வஸ்திரங்கள், மங்கலப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளை மங்கல வாத்தியங்கள் முழங்கிட கொண்டுவந்து, நீர் தலமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் உதவி ஆணையர் ஜெயசித்ரா மற்றும் அர்ச்சகர்களிடம் வழங்கினர். இந்த சிறப்பான நிகழ்வு 200 ஆண்டுகளுக்‍கு பின்னர் நடைபெறுவதால் ஏராளமான பக்‍தர்கள் பங்கேற்று சீர்வரிசை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு வருங்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முடிவில் நடைபெறும் என தெரிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00