விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் சனிபகவான் - திருநள்ளாறில் லட்சக்கணக்கான பக்‍தர்கள் புனித நீராடி வழிபாடு

Dec 19 2017 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநள்ளாறில் இன்று காலை 10 மணி ஒரு நிமிடத்திற்கு சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். லட்சக்கணக்கான பொதுமக்கள் சனி பகவானை தரிசித்து வழிபட்டனர்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சனி பகவான் தனி சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்வது சனிப்பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. சனிப் பெயர்ச்சி ஒவ்வொருவரது ஜாதகத்திலும் அவரது வாழ்வில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்பது ஐதீகம்.

அந்த வகையில், தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சனிபகவான் இன்று காலை சரியாக 10 மணி ஒரு நிமிடத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி, தங்க காக வாகனத்தில் எழுந்தருளிய சனிபகவானுக்கு பால், பன்னீர், சந்தனம், நல்லெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து தங்க கவசம் சார்த்தப்பட்டு, கருங்குவளை மலர்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்பட்டது. சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைந்த அதே சமயம் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் நளதீர்த்ததில் நீராடிவிட்டு, சனி பகவானை வழிபட்டு தில தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர். விழாவையொட்டி திருநள்ளாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் புனித நீராடுவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்‍காக ஏராளமான படகுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00