திருச்சியில் பக்தர்களுக்கு சவுரிகொண்டை அணிந்து அருள்பாலித்த நம்பெருமாள் : ஸ்ரீபேராத்து செல்வி அம்மன் திருக்கோயில் பூக்குழி இறங்கும் விழா

Dec 22 2017 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 4ம் நாளான இன்று, சவுரிகொண்டை உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருவிழாவின் 4ம் நாளான இன்று காலை தொண்டரடிபொடியாழ்வார் இயற்றிய பாசுரத்திற்கேற்ப சவுரிகொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், தங்க கிளி, பவள மாலை, முத்துமாலை ஆகிய ஆபரணங்கள் சூடியபடி நம்பெருமாள் தங்கபல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழியெங்கிலும் அரையர்கள் பாசுரங்கள் பாடியதை கேட்டபடி வலம் வந்தார். தொடர்ந்து ஆழ்வார்கள் புடைசூழ பின்னே வர உள்பிரகாரங்களின் வழியே வந்தபடி கண்ணாடி சேவை கண்டருளி பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஆழ்வார்களுக்கு அருளமுதம்செய்து, பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். திருவாபரணங்கள சூடியபடி தேவர்கள் வந்திறங்கும் மார்கழிப்பொழுதில் அருள்பாலித்த பூலோக வைகுண்டப்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீபேராத்து செல்வி அம்மன் திருக்‍கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்‍கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஐயப்ப சுவாமி பக்‍தர்கள் விரதம் இருந்து, பூக்‍குழி இறங்குவது வழக்‍கம். அதன்படி, 21-வது ஆண்டாக பூக்‍குழி திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்‍கும் மேற்பட்ட ஐயப்ப பக்‍தர்கள் பூக்‍குழி இறங்கினார்கள்.

ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ பேராத்து செல்வி அம்மன் சப்பர பவனி வீதியுலா நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00