ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 5ம் நாளில் நம்பெருமாள் சவுரிகொண்டை, தங்கவிமானம், தங்கதாழம்பு உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்

Dec 23 2017 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கம் வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 5ம் நாளான இன்று நம்பெருமாள் சவுரிகொண்டை, தங்கவிமானம், தங்கதாழம்பு உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு ‍மேற்கொண்டனர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 18ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருநாளின் 5ம் நாளான இன்று காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் சவுரிகொண்டை, ரத்தின அபயஹஸ்தம், மார்பில் விமான பதக்கம், முத்துமாலை ஆகிய ஆபரணங்கள் சூடியபடி, கையில் தங்க தாழம்பு ஏந்தியவாறு உள்பிரகாரங்களில் அரையர்கள் சேவையினை வழியெங்கும் கேட்டபடி அர்ச்சுன மண்டபத்தில், பன்னிரு ஆழ்வார்கள் முன்னிலையில் எழுந்தருளச்செய்து பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார். அலங்காரப்பிரியனாக விளங்பவரும், அருள்தந்து காப்பவருமான நம்பெருமாளை, பூலோக வைகுண்டப்பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00