உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்‍கமான உற்சாகத்துடன் கொண்டாட்டம் : சொந்தபந்தங்களை பிரிந்து கட்டாய இடம்பெயர்தலுக்‍கு ஆளாகும் மக்‍களை அனைவரும் அரவணைக்‍க வேண்டும் என போப்ஃபிரான்சிஸ் கிறிஸ்துமஸ் தின வேண்டுகோள்

Dec 25 2017 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகில் அன்பான சொந்தங்களையும், சுற்றத்தாரையும் விட்டுப் பிரிந்து கட்டாய இடம்பெயர்தலுக்கு ஆளாகும் மக்களுக்‍கு அனைவரும் ஆதரவளித்து அரவணைக்க வேண்டும் என போப் ஃபிரான்சிஸ் கிறிஸ்துமஸ் தின வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏசு கிறிஸ்து பிறந்த புனித நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்து பிறந்த ஜெருசலேம் நகரின் பெத்லஹாமில் Church of the Nativity தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்களும், பாலஸ்தீனர்களும் கலந்து கொண்டனர். திருப்பலியை நடத்திய பேராயர் Pierbattista Pizzaballa, மக்களின் வாழ்க்‍கையை தீர்மானிக்கும் எதிர்காலத்தை தலைவர்கள் தீரத்துடன் எதிர்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். இந்த கிறிஸ்துமஸ் திருப்பலியில் பாலஸ்தீன அதிபர் Mahmoud Abbas உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க மக்களின் புனித தலமான வாடிகனில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக்‍ கொண்டாட, உலகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் குவிந்தனர். வாடிகன் தேவாலயத்தின் St. Peter's சதுக்கத்திலும் அதற்கு வெளியிலும் குவிந்த மக்களுக்காகவும், உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்துவ மக்களுக்காகவும் போப் ஃபிரான்சிஸ் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் செய்தி தெரிவித்த அவர், அன்னை மேரிக்‍கும், Joseph-க்கும் அடைக்கலம் கொடுத்தது போல் தற்போது உலகம் முழுவதும் கட்டாய இடம்பெயர்தலுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு அனைவரும் அடைக்கலம் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

எகிப்து நாட்டின் தலைநகர் Cairo வில் உள்ள St. Joseph's Roman Catholic தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். இந்த தேவாலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் இந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்காக பிரார்த்தனை மேற்கொண்ட அவர்கள், வரும் ஆண்டு உலகம் முழுவதும் அமைதி நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்தியாவிலும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு திருப்பலிகளில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

பெங்களூருவில் உள்ள St. Francis Xavier's Cathedral, கோவாவில் உள்ள Our Lady of the Immaculate Conception Church, கொல்கத்தாவில் உள்ள தேவாலயங்கள் என நாடுமுழுவதும் கிறிஸ்துவர்கள் நள்ளிரவு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். கேரல் பாடல்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00