ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா - அதிகாலை நடைபெற்ற சொர்க்‍கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று லட்சக்கணக்‍கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Dec 29 2017 2:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைகுண்ட ஏகாதசி திருநாளான இன்று பூலோகவை குண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீ்ரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 18-ம் தேதி பகல் பத்து திருமொழியுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு பரமபதவாசலைக் கடந்துச் சென்றனர். பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சிதந்து திருக்கொட்டகை கண்டருளினார். தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தினருகே திருமாமணி ஆஸ்தான மண்டபத்தினை வந்தடைந்து பக்தர்களுக்கு பொது ஜனசேவை கண்டருளினார்.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி அழகிரிநாதசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருப்பாவை பாடல்கள் பாடப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

நாகையில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பரிமளநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதேபோல், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00