தமிழகத்தில் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து சிவன் ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம்

Jan 2 2018 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து சிவன் ஆலயங்களிலும் ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஸ்ரீதியாகராஜசுவாமி, யாதஸ்தானத்தில் இருந்து ராஜநாராயண மண்டபத்திற்கு இன்று அதிகாலை எழுந்தருளினார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதன்பின்னர், ஸ்ரீதியாகராஜசுவாமி தனது வலது பாதத்தை பக்தர்களுக்கு காண்பித்து அருள் பாலித்து வருகிறார். மார்கழி ஆருத்ரா தரிசனம் அன்று தனது வலது பாதத்தையும், பங்குனி உத்திரத்தன்று தனது இடது பாதத்தையும் ஸ்ரீதியாகராஜ சுவாமி காண்பித்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது குறிப்பிடதக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, மூன்றாம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கோடி ருத்திராச்சங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்பின்னர், கஜபூஜையும், கோபூஜையும் நடத்தப்பட்டு திரை விலக்கப்பட்டு மாணிக்க வாசகருக்கும், நடராஜருக்கும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தில் நடராஜர் திருத்தாண்டவம் ஆடிய பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபை அமையப்பெற்ற குற்றாலத்தில் உள்ள குழல்வாய் மொழியம்மை திருக்‍குற்றாலநாத சுவாமி திருக்‍கோவிலில் உள்ள திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோன்று, திருவெற்றியூர் வடிவுடையம்மன் சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயில், நாகை வேதாரண்யேசுவரர் கோயில், கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் ஆலயம், தூத்துக்குடி சிவன் கோயில், நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர்கோயில், அருப்புக்கோட்டை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆலயம், பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோயில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00