தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் ராம நவமியையொட்டி சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்

Mar 26 2018 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு திருக்‍கோயில்களில் ராம நவமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள, ஸர்வ வியாதி ஹர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமி ஆலயத்தில் ராம நவமி விழா விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை கோ பூஜையை தொடர்ந்து, சீதா ராமபிரானுக்கு, பால், பன்னீர், பழம், தயிர், மஞ்சள் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

ராம நவமி விழாவில் திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று மாலை சீதா ராமபிரான் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சென்னை அசோக்‍நகர் ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. இன்றுகாலை முதல் தொடர்ந்து ராமநாம வேள்வி நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்‍தர்கள் நீண்டவரிசையில் நின்று, ராமருக்‍கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டு வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன. ஷீரடியில் நடைபெறுவதைப்போன்று ஸ்ரீராம நவமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலயத்திற்கு வந்த பக்‍தர்களுக்‍கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பஞ்சவடியில், 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில், ராம நவமியையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பஞ்சமுக ஆஞ்சநேயருக்‍கு 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00