கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு : 50-க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Apr 6 2018 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசாதம் சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்‍கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் நாடார் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிள் நேற்று தொடங்கியது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துக்கு பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்திற்கு அசல் நெய்யை பயன்படுத்தாமல் தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்த படும் நெய்யை பயன்படுத்தியுள்ளனர். இதனால், பிரசாதம் சாப்பிட்டவர்களுக்‍கு தீடீர் குளிர் காய்ச்சல் தலைவலி வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மேட்டுபாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 31 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உரிய சிகிச்சைக்குப் பின்னர் 12 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று சென்றனர். 2 குழந்தைகள் உட்பட 19 பேர் மேட்டுபாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பிரசாதம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த லோகநாயகி, சாவித்திரி ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மேட்டுபாளையம் வட்டாட்சியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் மேட்டுபாளையம் பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00