திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஸ்ரீஅன்னை காமாட்சியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா : ஏராளமானோர் மலர்களை அம்மனுக்கு காணிக்கை

Apr 19 2018 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ஸ்ரீஅன்னை காமாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டு மலர்களை அம்மனுக்‍கு காணிக்‍கை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி செங்குளம் மேல்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை வசந்த விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஒருபகுதியாக, அம்மனுக்‍கு பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. பெண்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விழாவில், பல்வேறு வண்ண வண்ண மலர்களை தட்டுகளிலும், கூடைகளிலும் ஏந்தி முக்‍கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அம்மனுக்‍கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்‍கவசம் சாற்றப்பட்டு அலங்கரிக்‍கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பக்‍தர்கள் மலர்களை அம்மனுக்‍கு காணிக்‍கையாக செலுத்தி பூச்சொரிதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்‍கு சிறப்பு மகா தீபாரதனை நடைபெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதனிடையே, சேலம் மாவட்டம் களரம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீகாளியம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு, பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய பகுதிகளின் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு, பால் குடம், முளைப்பாரிகளை சுமந்து ஊர்வலமாகச் சென்றனர். இதில் குதிரைகள் மற்றும் காளைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று கோயிலில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். இந்த ஊர்வலத்தில் மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் ஆடிப்பாடி அம்மனை வழிபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00