மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான இடம் சட்ட விரோதமாக விற்பனை : திருத்தொண்டர் சபையினர் குற்றச்சாட்டு

May 17 2018 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நான்காயிரம் கோடி மதிப்பிலான இடம் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருத்தொண்டர் சபையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இடங்கள் உள்ளன. இந்த இடத்தின் மூலம் கிடைக்‍கும் வருமானம், கோயிலின் சிறப்பு பூஜைகள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் போன்ற செலவினங்களுக்‍கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அந்த இடங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த இடங்களை வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பகுதியில் திருத்தொண்டர் சபையினர், நூறு ஆண்டுகளுக்கு முன் உள்ள ஆவணங்களை வைத்து ஆய்வு செய்ததில், நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 68 ஏக்கர் இடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இந்த இடங்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00