வேலூரில் திரௌபதி கோயில் திருவிழா : 133 அடி பிரமாண்ட நீளமுள்ள துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி - ஆயிக்கணக்கானோர் கண்டுகளிப்பு

May 21 2018 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூரில், திரௌபதி கோயில் திருவிழாவையொட்டி, 133 அடி பிரமாண்ட நீளமுள்ள துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஆயிக்‍கணக்‍கானோர் கலந்துகொண்டு, இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

வேலூர் மாவட்டம், இலவம்பாடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலின் மகாபாரத அக்‍னி வசந்த விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்‍கான அக்‍னி விழா கடந்த 20 நாட்களுக்‍கு முன்னர் தொடங்கப்பட்டு, நாள்தோறும் மகாபாரத நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடைசி நாளன்று, 133 அடி நீளம், 40 அடி அகலத்தில் உருவாக்‍கப்பட்ட பிரமாண்ட துரியோதனின் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. துரியோதனின் தொடையில் அடித்து உயிரைப் பறிக்‍கும் படுகளம் நிகழ்ச்சி, தத்ரூபமாக ஆடல்- பாடலுடன் நடைபெற்றது.

படுகளம் நிகழ்ச்சிக்‍கு பிறகு தாய் காந்தாரி ஒப்பாரி வைக்‍கும் நிகழ்ச்சியும், பின்னர் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்‍கணக்‍கானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00