திருப்பூரில் கருப்பணசாமி கோயிலில் பல்லி சகுனத்தின்படி பொங்கல் விழா : 2 டன் இரும்பு அரிவாளை காணிக்கையாக வழங்கிய பக்தர்

May 21 2018 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் அருகே கருப்பண்ணசாமி கோயிலுக்‍கு, பக்‍தர் ஒருவர் 2 டன் எடையுள்ள இரும்பு அரிவாளை காணிக்‍கையாக வழங்கியுள்ளார். இதனை, கோயிலுக்‍கு வரும் பக்‍தர்கள் ஆர்வத்துடன் பார்த்து வணங்கிச் செல்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்‍காடையூர், கஸ்ப பழையகோட்டையில் உள்ள மூடுபாறை கருபண்ணசாமி கோயில் நாடார் சமூகத்தின் குலதெய்வமாகத் திகழ்கிறது. இக்‍கோயிலில் முக்‍கிய விழாவாக பெரிய பொங்கல் விழா நடைபெறுகிறது. இதற்கு சாமியிடம் பல்லி சகுனம் கேட்பது வழக்‍கமாக உள்ளது. பல்லி சகுனம் சொன்னால் மட்டுமே பொங்கல் வைப்பது மரபாகும். இதையொட்டி சுமார் 31 ஆண்டுகளுக்‍குப் பின்பு கடந்த ஆண்டு பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

இத்தகைய சிறப்புகள் கொண்டுள்ள இக்‍கோயிலுக்‍கு வருகை தந்த பக்‍தர் ஒருவர், தான் விபத்தில் இருந்து குணமடைந்ததை அடுத்து, கோயிலுக்‍கு சுமார் 23 அடி உயரமுள்ள 2 டன் எடைகொண்ட அரிவாள் ஒன்றை காணிக்‍கையாக வழங்கினார். இந்த பிரம்மாண்ட அரிவாளை அப்பகுதி மக்‍கள் மற்றும் கோயிலுக்‍கு வரும் பக்‍தர்கள் வியந்து வணங்கிச் செல்கின்றனர்.

இதுபோன்ற பிரம்மாண்ட அரிவாள், வேறு எந்த கோயில்களிலும் இல்லை என்பது இக்‍கோயிலுக்‍கு சிறப்பாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00