திருச்சி சமயபுரம் கோயிலில் பாகனை மிதித்துக்‍ கொன்ற மதம்பிடித்த யானை - நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்‍குள் கொண்டுவரப்பட்ட யானையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்‍கை

May 25 2018 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி சமயபுரம் கோயில் யானை மிதித்து பாகன் உயிரிழந்த நிலையில், பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்த யானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். கோயிலுக்‍குள் நிகழ்ந்த இந்த சம்பவம் பக்‍தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மனுக்‍கு கோயிலுக்‍கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், திருவிழாவின்போது அம்மனுக்‍கு சாற்றப்பட வேண்டிய வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் சுமந்து வரும் கோயில் யானை மசினிக்‍கு இன்று திடீரென திடீரென மதம்பிடித்தது. இதனையடுத்து, அருகிருந்த பாகன் கஜேந்திரனை, யானை காலால் மிதித்துக்‍ கொன்றது. இதனையடுத்து, அங்கிருந்த பக்‍தர்கள் அலறியடித்துக்‍கொண்டு ஓடினர். இதில் 8 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து, கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களை கோயில் பணியாளர்கள் பூட்டிவிட்டு யானையால் பக்‍தர்களுக்‍கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்‍கை மேற்கொண்டனர்.

மதம்பிடித்த யானை மசினியை சமாதானப்படுத்தும் முயற்சியாக, ஜெயா என்ற யானை வரவழைக்‍கப்பட்டது. மேலும், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினரும் அங்கு முகாமிட்டனர். பல்வேறு நடவடிக்‍கைகளைத் தொடர்ந்து இந்த யானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக கோயில் நடை உடனடியாக சாத்தப்பட்டது. பரிகார பூஜைகள் நடைபெற்ற பின்னரே நடை திறக்‍கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மதம்பிடித்த யானையை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்‍குள் பாகனை, யானை கொன்ற சம்பவம் பக்‍தர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00