உலகப் பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வெகு விமரிசையாகத் தொடங்கியது - பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு

May 27 2018 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் பிரசித்திபெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.

சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், கோயில்களின் கோயில் என்று அழைக்‍கப்படுவதுமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம், சைவ சமய குறவர்களால் பாடல்பெற்ற புராதன சிறப்புவாய்ந்த தலமாகும். உலக அளவில் திருவாரூருக்‍கு பெருமை சேர்ப்பது ஆழித்தேராகும். பல்வேறு சிறப்புகளைக்‍ கொண்டுள்ள இக்‍கோயிலின் வருடாந்திர உற்சவத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை ஆழித்தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. இதையொட்டி தியாகராஜசுவாமிக்‍கு சிறப்பு பூஜை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர் சக்‍கரங்களுக்‍கு சந்தனம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் கொண்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆதின கர்த்தர்கள், சைவ சமய சான்றோர்கள், சிவனடியார் பெருமக்‍கள் உள்ளிட்டேடோர் ஆழித்தேரின் வடத்தை பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து, பக்‍தி பரவசத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர். நிலையடியில் இருந்து வடம்பிடிக்‍கப்பட்ட ஆழித்தேர், தெற்கு ராஜவீதி, மேலராஜ வீதி, வடக்‍கு ராஜவீதி வழியாக கிழக்‍கு ராஜ வீதியில் உள்ள தேர் நிலையடியினை இன்று இரவு அல்லது நாளை மீண்டும் அடையலாம் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00