உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் கோபுரம் இடிதாக்கி சேதம் : அனைத்து கோபுரங்களிலும் இடிதாங்கி பொருத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Jun 6 2018 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் கேரளாந்தகன் கோபுரத்தின் ஒருபகுதி இடிதாக்‍கி சேதமடைந்தது.

தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுரை ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் வருகைதந்து கட்டிட கலையை பார்த்து வியந்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சையில் நேற்று 20 நிமிடங்கள் பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது தஞ்சை பெரியகோவிலில் 40 அடி உயரத்தில் உள்ள கேரளாந்தகன் திருவாயில் கோபுரத்தின் மேல் வலதுபுறத்தில் வளைவு போன்ற சிறுபகுதி இடிதாக்கி சேதமடைந்தது. இந்த சேதமடைந்த பகுதி அருகே இடிதாங்கி பொருத்தப்பட்டிருந்தது. இந்த இடிதாங்கி செயல்படாததால் கோபுரம் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவில் புராதன கோவிலாக விளங்குவதால் பெரியகோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களிலும் இடிதாங்கி பொருத்தி செயல்பட வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00