தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் நோன்பு நிகழ்ச்சி : ஏராளமானோர் பங்கேற்பு

Jun 7 2018 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் நோன்பு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மத ஒருமைபாடு நிகழ்ச்சியாக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் இணைந்து ரமலான் நோன்பு கொண்டாடினார். நிகழ்ச்சியில், அக்கல்லூரியில் பயிலும், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவிகளும் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொழுகைக்கு பின்னர் கஞ்சி அனைவருக்கும் உணவாக பரிமாறபட்டது.

நெல்லையில், இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் சமுதாய நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வ சமயத்தை வலியுறுத்தும் வகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அம்மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதிஷ், மத நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாகூரில் தனியார் வங்கி கிளை சார்பாக, சாதி, மத பேதமின்றி மத நல்லிணக்க இப்தார் என்னும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 21வது நாளான நேற்று சிறப்பு தொழுகைக்கு பிறகு, அனைவருக்கும் நோன்பு கஞ்சி, பழங்கள், குளிர்பானம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00