தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Jun 11 2018 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் எழுந்தருளியுள்ள ஏகநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு யாகசாலையிலிருந்து மேளதாளங்களுடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு புனித நீரானது சிவாச்சாரியர்கள் வேத மந்திராங்கள் முழங்க விமான கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஏக நாயகரின் அருளை பெற்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கொள்ளிடம் ஆற்றிலிருந்து தீர்த்தகுடம் எடுத்து வந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இதில் புதுக்குடி, மேலவாளாடி, கீழவாளாடி, தத்தனூர், எசனைக்கோரை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

வேலூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் கிராமத்தில் உள்ள வள்ளுவர் வீதியில் பழைமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோயில், புணரமைக்‍கப்பட்டு, பெரிய கோயிலாக கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கி வேத மந்திரங்கள் முழங்க ஆலய அர்ச்சகர் அம்மனுக்கு கலச நீரை ஊற்றினார். பின்னர் கலச நீரானது பக்தர்களுக்கு தெளிக்க பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழக மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே, வேலூரில் மிகப் பழமையான கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில், நேற்று இரவு, மாணவிகளின் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சி, புஷ்பாஞ்சலி நடனத்தோடு நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகள், பல்வேறு வண்ண உடைகளில் வந்து, அபிநயங்களுடன் பாடல்களுக்‍கு ஏற்றவாறு நடனமாடி அனைவரது பாராட்டையும் பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00