திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் சுவாமிகள் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் அஞ்சலி

Jul 12 2018 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஜீயர் சுவாமிகள் உடலுக்கு அம்மா மக்கள் முனேற்றக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் அனைத்து முக்கிய வழிபாடுகள் மற்றும் நிர்வாகப்பணிகளை சிறப்போடு மேற்கொண்டவர் ஜீயர் சுவாமிகள். அண்மையில், ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை சிறப்பாக நடத்தினார்.

வயது முதிர்வு காரணமாக, உடல் நலம் குன்றிய ஜீயர் சுவாமிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பிற்பகல் முக்தியடைந்தார்.

முக்தியடைந்த ஜீயர் மாண்புமிகு அம்மா மறைவுக்கு பின்னர் கழக பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் மாண்புமிகு புடச்சித்தலைவி அம்மா மறைவு தமிழ் மக்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு என்றும் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நிழல்போல் இருந்த சின்னம்மாதான் கட்சி தலைமையை ஏற்று நடத்த வேண்டும்-புரட்சித்தலைவிக்குப் பின் பொருத்தமான தலைவி சின்னம்மாதான்-எனவே தைரியத்துடன் கட்சிப் பொறுப்பையும், ஆட்சிப் பொறுப்பையும் ஏற்று வழிநடத்த வேண்டும் என்பதே மக்கள் விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜீயர் சுவாமிகள் முக்தியடைந்த செய்திகேட்டு, மிகுந்த துயரம் அடைந்ததாக, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜீயரை இழந்து வாடும் மடத்தின் அங்கத்தினர்களுக்கும், அவர்மீது பற்று கொண்ட அனைவருக்கும், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திரு. டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் கழக அமைப்பு செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.ஆர்.மனோகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடன் மாவட்ட, பகுதி கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ARAM PESA VIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2935.00 Rs. 3139.00
மும்பை Rs. 2956.00 Rs. 3130.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3144.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.10 Rs. 40100.00
மும்பை Rs. 40.10 Rs. 40100.00
டெல்லி Rs. 40.10 Rs. 40100.00
கொல்கத்தா Rs. 40.10 Rs. 40100.00