கரூரில் ஆடி முதல்நாளை வரவேற்கும் காவேரி - அமராவதி ஆற்றின் கரையோரங்களில் தேங்காய் சுடும் விழா : ஏராளமானோர் தங்கள் வீட்டு முன்பு தேங்காய் சுட்டு கோலாகலமாக கொண்டாட்டம்

Jul 18 2018 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் ஆடி முதல் நாளை வரவேற்கும் வகையில், காவேரி மற்றும் அமராவதி ஆற்றின் கரையோரங்களில் தேங்காய் சுடும் விழா நடைபெற்றது.

தமிழ் மாதமான ஆடி முதல் நாளன்று கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் காவேரி ஆற்றின் கரையோரங்களில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. தேங்காயின் ஒரு கண்ணில் துளையிட்டு அதன் நீரை முழுவதும் வெளியேற்றிய பின்னர், தேங்காயினுள் எள், கடலை, வெல்லம், அவல், பாசிப்பயறு, ஏலக்காய் ஆகியவற்றை இட்டு அந்தத் தேங்காயை, அமராவதி ஆற்றுபடுகையில் நெருப்பு மூட்டி, நண்பர்கள், உறவினர்களுடன் நெருப்பில் தேங்காயைச் சுட்டனர். பின்னர், தேங்காய் நன்கு வெந்தவுடன், அதனை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர். இந்த விழாவில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் போன்ற காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபட்டனர். அந்த வகையில், சேலத்தில் ஏராளமானோர் தங்கள் வீட்டு முன்பு தேங்காய் சுட்டு கோலாகலமாக கொண்டாடினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00