தமிழகத்தில் உள்ள முக்‍கிய கோயில்களில் பூஜை, அன்னதானத்திற்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு - விசாரணையில் திடுக்‍கிடும் தகவல்கள் அம்பலம்

Aug 6 2018 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பூஜை, அன்னதானத்திற்கான ஆன்லைன் முன்பதிவில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.

தமிழகத்தில் முக்கியமான கோவில்கள் பட்டியலில் சுமார் நான்காயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. இந்த கோவில்களில் அன்னதானம் மற்றும் பூஜைகள் நடத்துவதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை இருந்து வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்‍கு வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் வசூலாகும் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நிறுவனங்கள் இந்து சமய அறநிலையத்துறைக்‍கு செலுத்தி வந்தன. ஆனால், கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்த தொகை செலுத்தப்படுவதில்லை என்றும், முறையான கணக்‍குகள் தாக்‍கல் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும், அதில், அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, பழனி கோயிலில் ஆன்லைன் மூலம் வசூல் செய்த பணத்தில், ஸ்கை என்ற தனியார் நிறுவனம் 25 கோடி ரூபாய் வரை அரசுக்‍கு செலுத்தவில்லை என்றும், இதுபோல திருத்தணி உள்ளிட்ட முக்‍கிய கோயில்களிலும் நடைபெற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடமும், ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதால் அதிகாரிகள் பலர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00