விநாயகர் சதுர்த்தி விழா - பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்

Sep 13 2018 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகப் பெருமானை பக்‍தி பரவசத்துடன் வழிபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கற்பகவிநாயகா் ஆலயத்தில் விநாயகா் சதூர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல், பல்லாயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர். இவ்விழாவினை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் அதிமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முந்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்‍கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விநாயகர் சதூர்தியையொட்டி, தூத்துக்குடி இரண்டாம் கேட் வரதவிநாயகர் ஆலயத்தில் சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிற்ப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம் காவிரிக்கரையில் பழைமை வாய்ந்த மங்கள விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆலயத்தில், முருகனை மடியில் அமர்த்தியவாறு அமர்ந்திருக்கும், ஸ்கந்த விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று மஹாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், 1008 மோதக ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள அறுபடை நவக்கிரக ஸ்ரீ ரத்தின விநாயகர் திருக்கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு யாகமும், விநாயகருக்கு புஷ்ப அலங்காரம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00