விநாயகர் சதுர்த்தி விழா : அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்

Sep 14 2018 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்‍கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா நீடூழி வாழ வேண்டி, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், ஆலந்தூர் பகுதிக்‍ கழகம் சார்பில், மதனந்தபுரத்திலுள்ள வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆலந்தூர் பகுதிக்‍கழகச் செயலாளர் திரு.ஏ.என். லட்சுமிபதி, ஆலந்தூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் திரு.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் திரு.மணப்பாக்கம் ரவி மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம், பம்மல் நகரக்‍ கழகம் சார்பில் 9 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பம்மல் நகரக் கழகச் செயலாளர் திரு.பி. ஜெயகோபி, வட்டக்கழகச் செயலாளர்கள் திரு.லோகநாதன், திரு.ரவி, திரு.ஸ்ரீவிக்னேஷ், பம்மல் நகர அவைத்தலைவர் திரு.சாம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. 21 அடி நீளம் கொண்ட தசாவதார விநாயகர் சிலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், கழகத்தின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகர மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வெங்கடாசலம், புறநகர் மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.S.K. செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00