புஷ்கர திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் - திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Oct 13 2018 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

புஷ்கர திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

144 ஆண்டுகளுக்‍குப் பின்னர் தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழா நடைபெற்று வருகிறது. நெல்லை, பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்‍குறிச்சி உட்பட 149 இடங்களில் புஷ்கர விழாவுக்‍கான பூஜைகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரளான பக்‍தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஆன்மீக அமைப்புகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே படித்துறையில் தாமிரபரணி ஆற்றுக்‍கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, தாமிரபரணி ஆற்றில் திரளான பக்‍தர்கள் நீராடினர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், வேலாகுறிச்சி ஆதினம், ஸ்ரீமுத்துகுமாரசுவாமிகள், பெருங்குளம் செங்கோல் ஆதினம் உட்பட பலர் கலந்து கொண்டு நீராடினர். இதனைத்தொடர்ந்து, தாமிரபரணி அன்னைக்‍கு ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00