நவராத்திரியையொட்டி தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் வழிபாடு

Oct 16 2018 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவராத்திரியையொட்டி, தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

நவரார்த்திரியையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் நங்கநல்லூர் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், நாராயணன் கிருஷ்ண பகவான் வேடத்தில் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. கிருஷ்ண பகவானுக்கு பல்வேறு வாசனை மலர்களைக் கொண்டு மாலை அணிவிக்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ண பகவான், கன்னி மரத்தில் புல்லாங்குழல் ஊதிய கோலத்தில் அருள் பாலித்தபடி, முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

பெரம்பலூர் நகரில் பிரசித்திப்பெற்ற அருள்மிகு மரகதவல்லி தாயார் உடனுறை மதனகோபால சுவாமி ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி தாயார், கொழு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

கரூர் அடுத்துள்ள வெண்ணைமலையில், எட்டு கைககளுடன் 6 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டபுஜ ஜெயதுர்க்காம்பிகை அம்மன், தங்க அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அம்மனுக்‍கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏரளாமான பக்‍தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு நாள்தோறும் பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்று வருகின்றன. 6-ம் நாள் விழாவில் சோவி மற்றும் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயத்தில் நவராத்திரிவிழாவையொட்டி, சரஸ்வதிதேவி அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் அம்பாளை வழிபட்டனர்.

நாகப்பட்டினத்தை அடுத்த பழமை வாய்ந்த உச்சிமாகாளி அம்மன் ஆலயத்தில், நவராத்திரி விழாவையொட்டி, வினாயகர், சரஸ்வதி, லெட்சுமி, கிருஷ்ணன், தசாவதாரம் உள்ளிட்ட பலவிதமான நூற்றுக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கோயில் வைக்‍கப்பட்டுள்ளன. இதற்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த கொலு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள தருமபுரீஸ்வரர் ஆலயத்தில், பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜதுர்க்கா மகாலெஷ்மி ஆலயம் அமைந்துள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தசசண்டி யாகம் மற்றும் தீபலெட்சுமி பூஜை நடைபெற்றது. 9 குத்துவிளக்குகள், தீப லெட்சுமியாக பாவிக்கப்பட்டு, மஹாதீபாரானை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நவராத்திரியை​யொட்டி, கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற மகாமகக் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ அபிமுகேஸ்வரர் ஆலயத்தில் கொலு கண்காட்சியில், மகாபாரத்தில் பாஞ்சாலியின் துகில் உரியும் காட்சிகள், இந்திர சபை, காலிங்க நர்த்தனம், மற்றும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த குழந்தையின் தத்ரூப மர சிற்பம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இவற்றை பக்தர்களை வியப்புடன் பார்த்துச் செல்கின்றன.

நவராத்திரியையொட்டி, புதுக்‍கோட்டை மாவட்டம் சாந்த நாத சுவாமி கோயிலில் உள்ள பெரிய நாயகி அம்மனுக்‍கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு மலர்களால் ஆன மாலை அணிவிக்‍கப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00