அனைத்து வயது பெண்களுக்கு அனுமதி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பிறகு முதன்முறையாக சபரிமலையில் நடைதிறப்பு - பலத்த பாதுகாப்புடன் பெண் பக்தர்களுக்கு அனுமதி

Oct 17 2018 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில் நடைதிறக்கப்பட்டு 18 படிகள் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. சன்னிதானம் அருகே பக்தர்கள் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்‍குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து, கேரளாவில், நாள்தோறும் போராட்டங்களும், கண்டன பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, ஐப்பசி மாத பூஜைக்‍காக கோயில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 18 படிகள் வழியாக, சன்னிதானம் அருகே பக்தர்கள் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டது. மேலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பெண் பக்தர்களும், தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ஐயப்பனை தரிசிக்‍க வரும் பெண்களை, சபரிமலையின் அடிவாரமான நிலக்கல் பகுதியிலேயே, இந்து அமைப்புகள் தடுத்து நிறுத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சபரிமலைக்‍கு வரும் அனைத்து பக்‍தர்களின் பாதுகாப்புக்‍காக நிலக்கல் மற்றும் பம்பையில், 800 ஆண் போலீசாரும், 200 பெண் போலீசாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை சன்னிதானம் பகுதியில், 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் சபரிமலைக்‍கு செல்வதை நிலக்‍கல் பகுதியில் தடுத்து நிறுத்திய போராட்டக்‍காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, காவல்துறை வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் ல்வீசி தாக்‍குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்ததையடுத்து, போராட்டக்‍காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

நிலக்கலில்லில் பெண் பக்தர்களுக்கு எதிராக 10 ஆயிரத்தும் அதிகமான எதிர்ப்பாளர்கள் குவிந்தனர். அவர்களை கட்டுப்பட்ட முடியாமல் காவல்துறையினர் திணறுகின்றனர். இதனால் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர கமாண்டோ படை விரைந்துள்ளது. இதனிடையே, சபரிமலையில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண் நிருபர் மீது தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் வாகனத்தை எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00