நவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்கள், வீடுகளில் சிறப்பு பூஜை - கொலு கண்காட்சி : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Oct 18 2018 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

நவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் கொலு கண்காட்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை அரியநாச்சி அம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு, அரியநாச்சி அம்மனுக்கு பூ, பட்டு ஆகியவை சாத்தப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. பின்னர், பல்வேறு கடவுள் உருவங்களில் கொலு பொம்மைகளைக் கொண்ட கொலு கண்காட்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நாகை மாவட்டம், தருமபுரத்திலுள்ள தருமபுரீஸ்வரர் ஆலயத்தில், நவராத்திரியை முன்னிட்டு, நவசண்டி யாகம் மற்றும் விருட்ச பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அரசம், ஆலம், மா, வாழை உள்ளிட்ட ஒன்பது விருட்சங்களுக்கு மஹாதீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. இதில், ஜல்லிக்கட்டு காளை, அதை அடக்கும் வீரர்கள், பல்வேறு மதக் கடவுள்கள், அஷ்டலட்சுமிகள் விளக்கம் என பல்வேறு கொலு பொம்மைகள் இடம்பெற்றிருந்தன.

அரியலூர் பத்ரகாளியம்மன் கோவிலில், உற்சவர் அன்னபூரணி அம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர், மும்பெரும் தேவியர்கள், நவக்கிரக நாயகிகள் உள்ளிட்ட கொலு பொம்மைகளைக் கொண்ட கொலுவிற்கு மகாதீபாராதனை நடத்தப்பட்டது. இதேபோல், கன்னிகா பரமேஸ்வரி கோவில், ஐந்துமுக விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00