சபரிமலையை கலவர பூமியாக மாற்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்க குற்றச்சாட்டு

Oct 18 2018 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை பிரச்சனைக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் போன்ற அமைப்புகளே காரணம் என கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்‍கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், சபரிமலையில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளுக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் போன்ற அமைப்புகளே காரணம் என குற்றம் சாட்டினார். பிற கோயில்களைபோல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நீதிமன்ற தீர்ப்பால், சபரிமலையில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நம்பிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான பக்தர்களின் உணர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சபரிமலைக்‍கு பெண்கள் வந்தால், தந்திரி குடும்பத்தினர் கோயிலை மூட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்‍கு மறுப்பு தெரிவித்துள்ள கோயில் தலைமை தந்திரி கண்டரு ராஜீவரு, சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்‍கு பெண்கள் வருவதை தவிர்க்‍க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00