விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்

Oct 20 2018 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

சாய்பாபாவின் 100-ஆவது ஆண்டு சமாதி தினத்தையொட்டி சென்னை மயிலாப்பூர், அலுமேலுமங்காபுரம் பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில், மாலை அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் சாய்பாபா மங்கல வாத்தியங்கள், செண்டை வாத்தியங்கள் முழங்க, மயிலாப்பூர் நான்கு மாட வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சென்னையை அடுத்த திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடைஅம்மன் திருக்‍கோயிலில் நவராத்திரி திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று, அம்மன் மீனாட்சி அலங்காரத்தில், தியாகராஜ சுவாமிகளுடன் கைலாய வாத்தியங்கள் முழங்க, நான்கு மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சந்திரசேகர சுவாமிகள் பாரிவேட்டை விமரிசையாக நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், விஜயதசமியையொட்டி அம்புபோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியநாயகியம்மன் கோயிலில் பராசக்திவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முத்துக்குமாரசாமி, தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்திவேல், லட்சுமி நாராயணப்பெருமாளுடன் கோதீஸ்வர் கோயிலை வந்தடைந்தார். கோதைமங்கலத்தில் கோதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், கோயில் முன்பு வன்னிமரம் மற்றும் வாழைமரமாக மாறி மறைந்திருக்கும் வன்னிகாசுரனை சக்திவேல் மற்றும் அம்புவில் சகிதமாக போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வதம் செய்தார். நள்ளிரவில் மலைக்கோயில், பெரியநாயகியம்மன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களில் சம்ரோட்சண பூஜைகள் நடத்தப்பட்டு அர்த்தஜாம பூஜை நடைபெற்றது.

நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நெற்றிப் பட்டம் சூட்டிய யானைகளின் அணிவகுப்புடன் கரகாட்டம், காவடி ஆட்டம், பொம்மலாட்டம், சிங்காரி மேளம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். பகவதி அம்மன் வெள்ளிக்‍குதிரை வாகனத்தில் மகாதானபுரத்தில் பாணாசுரனை வேட்டையாடி வதம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமம், அச்சப்பன் கோவிலில், விஜயதசமியொட்டி, சாட்டையால் அடித்து பேய் விரட்டும், 'வினோத' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், மண்டியிட்டபடி கைகளை உயர்த்தியவாறு காத்திருந்தனர். கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபரும் பக்தர்களை, சாட்டையால் அடித்தார்.

கரூர் அமராவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீ சாய்பாபா கோயிலில், ஏகாதசி திதி அன்று ஆராதனை விழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு உஞ்சி விருத்தி என்று அழைக்கப்படும் சாய் பிட்சை பெறுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கோவிலைச் சுற்றியுள்ள பகுதி மக்களிடம் பல்வேறு பொருட்கள் பிச்சை கேட்டு பெறப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தீரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்மதுரம் சாய்பாபா திருக்கோவிலில், சாய் பாபாவின் 100-வது ஆண்டு ஜீவசமாதி விழா நடைபெற்றது. 96 வகை மூலிகைப் பொருட்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு மூல மந்திரங்கள் முழங்க தீபாரதனை நடைபெற்றது. சாய் வழிபாட்டு பாடல்கள், சாய் பஜன் பாடல்கள் கூட்டுப் பிரார்த்தனை பாடல்கள் பாடப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாய் பாபாவை தரிசனம் செய்தனர்.

நாமக்‍கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மனுக்கு விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல், ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜைகளும், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விஜயதசமியையொட்டி, தங்கத் தேர் வீதியுலா நடைபெற்றது. ஸ்ரீமணக்குள விநாயகர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டுக்‍கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மணக்குள விநாயகரை தரிசித்தனர்.

சாய் பாபாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சாய்பாபா ஆலயம் சார்பில் ஏ.எஃப்.டி மில் திடலில் இருந்து பக்தர்கள், பாபாவின் ரத யாத்திரையுடன் பாத யாத்திரை சென்றனர். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, பாபா பாடல்களை பாடிச்சென்றனர். பாபாவின் ரதயாத்திரையை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00