ராமநாதபுரத்தில் நடைபெற்ற தசரா திருவிழா : ராஜராஜேஸ்வரி அம்மன், மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி, சூரனை அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது

Oct 20 2018 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவின் நிறைவு நாளான நேற்று நள்ளிரவு, சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன், மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருளி, சூரனை அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களின் குலதெய்வமான ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ளது. திருமலைநாயக்கர் மன்னர் காலம் தொட்டு, தசரா திருவிழா இந்த அரண்மனையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்‍கான தசரா திருவிழா கடந்த 9 நாட்களாக நடனம், நாட்டியம், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று நள்ளிரவு, ராஜராஜேஸ்வரி அம்மன் மகிசாசுரவரத்தினி திருக்கோலத்தில் அரண்மனையில் இருந்து புறப்பட்டார். நகரின் அனைத்து கோவில்களிலும் இருந்து 25-க்கும் மேற்பட்ட உற்சவமூர்த்திகள் புடைசூழ, மகர்நோன்பு பொட்டலில், சூரனை, மகிசாசுரவரத்தினி அம்பு எய்து வதம் செய்யும் நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்‍க வைத்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00