ஐப்பசி மாத பிரதோஷம் : சிவாலயங்களில் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Oct 23 2018 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, பல்வேறு சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்‍தர்கள் கலந்துகெண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை நகரில் உலகப் பிரசித்திப்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பிரதோசத்தை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், சந்தனம், ஆயிரம் லிட்டர் பால் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூ மாலை அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது, இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள திருப்புன்கூரில் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த புகழ்பெற்ற சிவலோகநாதர் சுவாமி ஆலயத்தில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு பால், சந்தனம், பழம் போன்ற பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காய், கனி, மலர்களை கொண்டு நந்திகேஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாதரனை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் 40 நாட்களுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 48 நாட்களாக மண்டல பூஜை நடைபெற்று வந்த நிலையில் இறுதி நாளான நேற்று மண்டலாபிஷேக பூஜை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ கெங்கையம்மன் மற்றும் விக்னேஸ்வர பூஜை மஹாசங்கல்பம், கோபூஜை உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து கலச பூஜை நடைபெற்றது. ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனித நீரை, விநாயகர், நவகிரஹகங்கள் மீது ஊற்றப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00