திருச்செந்தூர் சூரசம்ஹார விழா கோலாகலம் - சூரனை வதம் செய்த முருகப்பெருமானை பக்‍தி கோஷங்களுடன் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம்

Nov 14 2018 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்செந்தூர் முருகன் கோயிலில், இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்‍தர்கள் திருச்செந்‌தூர் கடற்கரையில் குவிந்து, வேல்-வேல் முருகா, வெற்றி வேல் முருகா, முருகனுக்கு அரோகரா என பக்‍தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா, கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவின் முக்‍கிய நிகழ்வான, ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி, இன்று மாலை, வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்‍தர்கள் குவிந்தனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சியின் போது, கோயில் கடற்கரையில் ஜெயந்திநாதர் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, கஜமுகம், சிங்கமுகங்களில் வந்த சூரபத்மனை, ஜெயந்திநாதர் வேல் கொண்டு வதம் செய்தார்.

சூரபத்மனை வதம் செய்த காட்சியினை அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகா என்றும், திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா, அரோகரா என்றும் விண்ணதிர பக்தி ‍கோஷங்களை முழங்கி வழிபட்டனர். சூரபத்மனை வதம் செய்த ஜெயந்திரநாதர் பின்னர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார்.

இதனையடுத்து, 6 நாட்கள் விரதம் இருந்த பக்‍தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00