தமிழகத்தின் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Dec 24 2018 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் ஸ்ரீகாமாட்சி அம்மன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் திருவாதிரையையொட்டி ஆருத்ரா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உற்சவர் ஸ்ரீநடராஜரை தோளில் தூக்கி சுமந்த பக்தர்கள் ஆருத்ரா நடனத்தை நடத்தினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆரூத்ரா சங்கமம் நடைபெற்றது. திருவாதிரை தினத்தையொட்டி 8 சிவாலய உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் அஷ்ட மூர்த்திகள் சங்கமம் கடந்த பல ஆண்டுகளாக மன்னார்குடியில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு திருவாதிரையையொட்டி மன்னார்குடி தேரடி பகுதியில் ஆருத்ரா சங்கமம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அருள்மிகு நடராஜ பெருமான் அனந்த தரிசனமும், பின்னர் திருவீதி உலாவும், நடராஜ பெருமாளின் திருநடனக் காட்சியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியையொட்டி, நடராசப் பெருமான் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஒம் நமசிவாய என மந்திர முழக்கம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00