தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு : ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் உற்சவம் - நம்பெருமாள் தங்க கருடசேவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Jan 16 2019 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் தங்க கருடசேவையினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், பெரியகோவில் என அனைவராலும் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் பூபதிதிருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா கடந்த 12ம்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. தேர்திருவிழாவின் 4வது நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, வீதிகளின் வழியாக வலம்வந்து வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்துவந்தார், தொடர்ந்து வீரேஸ்வர மண்டபத்திலிருந்து தங்ககருடவாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவைசாதித்தார். பின்னர் நான்கு உத்திர வீதிகளின் வழியயாக வீதிஉலா வந்து அருள் பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டிருந்து நம்பெருமாளை வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தைத தேரோட்டம் 9ம் திருநாளான வருகிற 20ம்தேதி நடைபெறஉள்ளது.

காஞ்சிபுரம் தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள சுயம்பு கோலாட்ட்சியம்மன் ஆலையத்தில் ஸ்ரீகோதைநாயகி, ஸ்ரீ ரங்கமன்னாருக்கு 12ம் ஆண்டு திருகல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பல வகையான பழங்கள், கற்கண்டு ஆகியவை சீர் வரிசை தட்டுகளாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பக்தர்களுக்கு திருகல்யாண விருந்து வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருகல்யாணத்தை கண்டு களித்து வழிப்பாடு செய்தனர்.

காஞ்சிபுரத்தில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீஉலகளந்தபெருமாள் ஆலயத்தில் பிரமோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவில் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்குகாட்சி அளித்தார். காஞ்சிபுரம் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சபரிமலை ஜோதி தரிசன நிறைவு விழா மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மேல்கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயிலில் இருந்து தங்க கவசமும் திருஆபரணமும் செண்டைமேளம் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சான்றோர்குப்பம் சுயம்பு விநாயகர் கோயிலில் உள்ள சன்னதியில் ஐயப்பனுக்கு தங்க கவசம் அனிவிக்கபட்டு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

திருப்பூர் அடுத்த காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழாவையொட்டி ஆயிரக்கனக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. வரும் 21 ஆம் தேதி காலை சுப்பிரமணியசாமி ரதத்திற்கு எழுந்தருளல் நிகழ்வும், அன்று மாலை தேரோட்டமும் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில் இவ்வாண்டுப் பெரு விழாவின் முதல் நாளான நேற்று கொடியேற்று விழா வானவேடிக்கையுடன் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு Dr. ஜெ.சூசை மாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பங்கு மக்களின் கொடிபவனி, இசை முழங்க ஊர்வலமாக வந்து ஆலய முன்புள்ள கொடிமரத்தில் மரியே வாழ்க என்ற முழக்கத்துடன் மலர்கள் தூவி, வானவேடிக்கையுடன் கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான கிருத்துவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00