காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு

Feb 14 2019 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலிக்‍கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காதலர்கள் மலைக்கோட்டை கோவிலுக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

உலகம் முழுவதும் அன்பை வெளிப்படுத்தும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி ஆலயத்திற்கு வருகை தரும் காதலர்கள் மற்றும் இளம் ஜோடிகளுக்கு, எதிர்ப்பு தெரிவித்து, தாலிக்‍கயிறு வழங்கும் போராட்டம் நடத்த போவதாக இந்து தேசிய கட்சி அறிவித்திருந்தனர். மேலும் தாலி கயிற்றுடன் சமூகத்தை சீரழிக்கும் காதலர் தினத்திற்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டபடி ஊர்வலமாக வந்த இந்து தேசிய கட்சியினரிடம் போலீசார் இளம் ஜோடிகளை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதேநேரம் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலுக்கு வருகை தந்த இளம் ஜோடிகள் மற்றும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களை போலீசார் கோயில் வாசலிலேயே தடுத்து அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.

மணப்பாறையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், காதலர் தின எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளில் நடந்து சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவர் கடந்த 12 ஆண்டுகளாக காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00