தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் மகாகும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Feb 18 2019 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்‌தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புலி குன்றம் பகுதியில் உள்ள கடும்பாடி அம்மன் கோவிலில், நேற்று நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்களை சுமந்து சென்ற சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் கோ பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கிராமத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில், மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி விக்னேஷ்வர அனுக்கிரக பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து. பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கரூர் அடுத்துள்ள ஆரியூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்திலிருந்து கொடுமுடி சென்று காவி ஆற்றிலிருந்து புனித தீர்த்தத்தை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், குபேரலட்சுமி ஹோமம் நடைபெற்றது. பின்னர் சிவச்சாரியர்கள் வேதங்கள் முழங்க கோபுரத்தில் புனித நீர் ஊற்றினர். தொடர்ந்து புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00