பங்குனி மாதத்தில் பல்வேறு திருத்தலங்களில் விழாக்கள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Mar 18 2019 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
பங்குனி மாதத்தை முன்னிட்டு திருச்சி உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில் நடைபெற்ற விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில், தெப்பத்திருவிழாவின் 6ம் நாளான நேற்று தாயுமானவர், மட்டுவார் குழலம்மை சமேதராக யானை வாகனத்தில் எழுந்தருளியும், மற்றொரு ரதத்தில் அம்பாள் எழுந்தருளி மலைக்கோட்டை வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதியெங்கும் கோவில் யானை லட்சுமி முன்செல்ல அதனைத்தொடர்ந்து சிவனடியார்கள் பாடல்களைப் பாடியபடி தொடர்ந்து வந்தனர். வீதி உலாவினையடுத்து இரவு வாகனமண்டபத்தைச் சென்றடைந்தார். தொடர்ந்து வரும் 20ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

நாகை மாவட்டம், திருக்கடையூர் மாரியம்மன் ஆலயத்தின் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு, நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், விரதமிருந்து அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவற்றை சுமந்து வந்த பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்து வந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயில் முழுவதும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று, வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி திருக்கோயிலில், பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, ருக்மணி சமே‌த ராஜகோபாலசுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வேதநாராயணர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறுவர்களின் ஆடல் பாடல் பஜனைகளுடன் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00