தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சித்திரைத் திருவிழா : நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

May 6 2019 6:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், நூற்றுக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மலாளிநத்தம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், சித்திரை அமாவாசையான முன்னிட்டு நடைபெற்ற சத்திய சம்ஹார யாகம் மற்றும் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்‍குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று அருள்வாக்கு கூறப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று, வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த பின்னர், வாகன மண்டபம் வந்து சேர்ந்தார், இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் அருகே உள்ள சவரியார் பாளையத்தில் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், சித்திரைத் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர், அம்மனுக்‍கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், புகழ்பெற்ற குறிஞ்சி ஆண்டவர் திருக்கோவில் மற்றும் பூம்பாறை குழந்தை வேலப்பர் திருக்கோவிலில், உலக நன்மைக்காகவும், பருவமழை பெய்ய வேண்டியும், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இதில் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, துர்க்கை அம்மன் வீதி உலா நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக சென்று பக்‍தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஏந்தி, தீர்த்த குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அழகு முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பாப்பாக்குறிச்சியில் உள்ள மதுரைவீரன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வெள்ளிகரகம், தீச்சட்டி, காவடி, பால்குடம், தீர்த்தகுடம் எடுத்து, யானை, ஒட்டகம் அணிவகுக்க 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற திருவீதி உலா வந்து, அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதனைதொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தூத்துக்‍குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள நங்கைமொழியில் ஸ்ரீ காளதீஸ்வரர் கோயிலில், பருவ மழை வேண்டியும், உலக அமைதி வேண்டியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில், சித்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து காளதீஸ்வரக்கு பால், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 11 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் மன்னம்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில், ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் சுவாமிக்கு, சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையலிட்டதை போற்றும் வகையில், அமுது படையல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி, உத்தராபதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ வடக்கத்தி அம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நாடு நலம்பெற வேண்டியும், மழை மற்றும் விவசாயம் செழித்திட வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00