நாகையில் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா : 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி பக்தர்கள் வினோத நேர்த்திகடன்

May 13 2019 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகையில் பிரசித்திபெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை, 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி பக்தர்கள் வினோத நேர்த்திகடன் செலுத்தினர்.

நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவையொட்டி, காத்தவராய சுவாமி செடில் மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் தங்களது குழந்தைகளை 30 அடி உயர செடில் மரத்தில் ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். செடில் மரத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் சுற்றப்படுவதால் இன்று காலை வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து, கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பக்‍தர்கள் பல்வேறு மாவிளக்கு வைத்து படையலிட்டும், பால்காவடி, பன்னீர்காவடி உள்ளிட்ட பல்வேறு விதமான காவடிகளை எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்‍கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00