வைகாசி விசாகம் : தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

May 20 2019 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

வைகாசி விசாகத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகளில், ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியிலுள்ள திரெளபதி அம்மன் திருக்கோயிலில் தீமிதித் திருவிழாவையொட்டி, 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழுக்கத்துடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீ மிதித்துக் கொண்டிருந்தபோது பக்தர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், ஒருவர் அக்னி குண்டத்தில் தவறி விழுந்ததில் உடல் முழுவதும் தீ காயம் ஏற்ப்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார்.

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அழகிரிநாதர், ஸ்ரீதேவி-பூதேவியுடன் வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பூர் வீரராகவ பெருமாள் திருக்கோவில், வைகாசி விசாகத்தையொட்டி, வீரராகவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் திருத்தேரில், பூமி நீலாதேவி, கனகவல்லி தாயாருடன், வீரராகவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்‍தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத் தெரு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், மழை வேண்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பெண்கள் தலையில் பால்குடத்தை சுமந்து, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மனுக்‍கு பாலபிஷேகம் செய்தனர். திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் கிராமத்தில் உள்ள தேவதுர்கை அம்மன் ஆலயத்தில், விவசாயம் செழிக்கவும் போதிய மழை வேண்டியும் மஹா ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பால், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம் அடுத்த தென்னம்புலத்தில் பழைமை வாய்ந்த மழை மாரியம்மன் ஆலயத்தில், வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பிறகு எழுந்தருளினார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகி மண்டலம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தர்மர் ஸ்ரீதிரௌபதை அம்மன் ஆலயத்தில், மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. யாகங்கள் செய்யப்பட்ட புனித நீர், கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்‍தர்கள் கலந்கொண்டனர்.

காட்பாடி அடுத்த நடுமோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ கருமாரியம்மன் பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூல கோபுரத்தில் மேல் வைக்கபட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றபட்டு மகா கும்பாபிஷேகமானது கொண்டாடப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அர்த்தனாரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருத்தேரில் ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00