தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

May 27 2019 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னையை அடுத்த மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், ஸ்ரீ பீலிக்கான் முனிஸ்வரர் - அங்காள ஈஸ்வரி கோடிவில் தீமிதி திருவிழாவையொட்டி, உற்சவ தாயார் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பக்தர்கள், தீச்சட்டி ஏந்தியும், காவடி சுமந்தும், முளைப்பாரி தலையில் சுமந்தபடி பெண்கள் அக்னி குண்டத்தில், பக்தி பரவசத்துடன் இறங்கி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பாகசாலை கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அக்கினி குண்டத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் நேர்த்திக்‍கடன் செலுத்தினர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருநாராயணபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த வேதநாயகி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு, வேதநாராயணபெருமாள் உபநாச்சியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காம்பரேஸ்வரர் திருக்கோயிலில் மழைவேண்டி, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கங்கை, யமுனை ஆகிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஆயிரத்தெட்டு குடங்களில் நிரப்பட்டு சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தில் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அபிராமி உடன் அபராத ரட்சகர் ஆலத்தில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசர் மடத்தின் வாயிலாக ஆலயத்திற்கு வந்த சிவனடியர்கள், கோவில் வளாகத்தில் இருந்த முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர். கோவிலில் கருவறை மற்றும் சிலைகளும் சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத பெருந்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பால் மற்றும் தீர்த்தத்தை தலையின்மீது சுமந்தபடி நீண்ட தூரம் நடந்து வந்து ஆலயம் வந்தடைந்தனர். பின்னர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை மனமுருகி தங்கள் கொண்டுவந்த பால் மற்றும் தீர்த்த குடத்தை கம்பத்தின் மீது அபிஷேகம் செய்தனர்.

நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரத்தில் பழைமை வாய்ந்த காலபைரவர் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஸ்ரீலெட்சுமி நரசிம்மர் கல்யாண மகோத்ஸவத்தையொட்டி, ஸ்ரீலெட்சுமிநரசிம்மர் திருக்‍கல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, பஜனை பாடல்களை பக்திப்பரவசத்துடன் பக்தர்கள் பாடி, வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாங்கல்யதாரண நிகழ்ச்சியுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00