48 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் நிறைவு - ஆகம விதிமுறைகள்படி, பல்வேறு பூஜைகளுக்குப் பின்னர், அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்பட்டார் அத்திவரதர்

Aug 18 2019 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரத்தில், தொடர்ந்து 48 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றதையடுத்து, வரதராஜப்பெருமாள் திருக்கோவிலின் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திற்குள் அத்திவரதர் மீண்டும் வைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம், கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கியது. ஜூலை 31-ம் தேதிவரை சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், இம்மாதம் 1-ம் தேதிமுதல், நின்ற கோலத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 47-வது நாளான நேற்று, அத்திவரதர் வெந்தய நிற பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள், அத்திவரதரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்திற்கு ஏற்றவாறு, 48ம் நாளான இன்று அதிகாலை வரை அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று மாலை, ஸ்தானிகர்கள் உள்ளிட்ட திருக்கோவில் நிர்வாகிகள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் உற்சவரான தேவராஜபெருமாள் அத்திவரதரை தரிசிக்கும் வைபவம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அத்திவரதரை மீண்டும் திருக்குளத்தில் வைப்பதற்கான ஆகம ரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, கோவிலின் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் இன்று நள்ளிரவு அத்திவரதர் வைக்கப்பட்டார். இதனையடுத்து, 40 ஆண்டுகளுக்குப் பின்னர், 2059-ம் ஆண்டு அத்திவரதர் மீண்டும், வெளியே கொண்டுவரப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00